ஊரை சுற்றி வரும் நியூஸ் பேப்பரால் கொரோனா பரவுமா? WHO பதில்!!

புதன், 25 மார்ச் 2020 (15:49 IST)
செய்திதாள்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுமா என எழுந்த கேள்விக்கு WHO பதில் அளித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி நிலவி வருகிறது. இதனால் உலக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த பல கேள்விகளுக்கும் சந்தேககங்களுக்கும் WHO பதில் அளித்து வருகிறது. 
 
அந்த வகையில் செய்தித்தாள்கள் மூலம் கொரோனா பரவுமா என பதில் அளித்துள்ளது. பல்வேறு சூழ்நிலைகள், தடப்வெப்ப நிலைகளில் எடுத்து வரும் பொருட்கள் மூலம் கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளது. எனவே, செய்தித்தாள்களும் இது போன்றது தான் என தெரிவித்துள்ளது. 
 
ஆனால், இந்திய மருத்துவ சங்கம், செய்தித்தாளும் மற்ற பொருட்களை போன்றது தான். ஆதலால செய்தித்தாள் வாசிக்கும் முன்பும் வாசித்த பின்னரும் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்