கைதிகள் இல்லாமல் சிறை வளாகத்தை வாடகைக்கு விடும் அதிசய நாடு!!

வியாழன், 13 ஜூலை 2017 (12:57 IST)
நெதர்லாந்து நாட்டில் கைதிகள் இல்லாமல் சிறைகள் வெறிச்சோடியுள்ளது. எனவே, சிறை வளாகத்தை வேறு பணிகளுக்கு வாடகை விட அரசு முடிவுசெய்துள்ளது. 


 
 
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களின் எண்ணிக்கை குறைவு. இதனால், சிறை வளாகத்தை வேறு சில பணிகளுக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. 
 
தற்போது பெண்களுக்கான சிறையை பிரபல உணவு விடுதி ஒன்றிற்கு வாடகைக்கு வழங்கியுள்ளனர். மேலும், குறிப்பாக முன்னாள் பெண்கள் சிறைச்சாலை ஒன்று, தற்போது பல விருதுகளை குவித்த உணவு விடுதியாக செயல்படுகின்றது. அந்நாட்டில் உள்ள பிரேடா சிறைச்சாலையில் கிட்டத்தட்ட 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்