99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
சனி, 22 ஜூலை 2017 (16:49 IST)
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம்.
இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாகவும் இதற்காக நாசா சில எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 21 ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. அந்த சமயத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.
இதை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று நாசா எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தை பார்க்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.