பூமியை விட சிறந்த கிரகம் ஒன்று இருக்குனா நம்ப முடியுமா?

சனி, 3 ஆகஸ்ட் 2019 (09:48 IST)
நாசாவின் டெஸ் செயற்கைக்கோள் சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியை போன்ற வடிவம் கொண்ட 3 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது. 
 
கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட டெஸ் இதுவரை 21 புதிய கோள்களை கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில் தற்போது பூமியில் இருந்து 31 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் 3 கோள்களை கண்டுபிடித்துள்ளது. இந்த கோள்களுக்கு GJ 357 b, GJ 357 c, GJ 357 d என பெயரிடப்பட்டுள்ளது. 
இதில் GJ 357 b கோளானது பூமியை மோன்று 22% பெரியதகவௌம், 80% பிரமாண்டமானவும் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் இது சூப்பர் எர்த் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
ஒதோடு, சூப்பர் எர்த் நட்சத்திரம் ஒன்றை சுற்றி வருவதாகவும் இதனால் அதிக குளிராகவோ, அதிக சூடாகவோ இல்லாமல் பூமியை போல சீதோஷ்ண நிலை இருக்க கூடுமாம். தண்ணீர் இருப்பதற்கான சாத்தியங்கள் தென்படுவதாகவும் நாசா தகவல் வெளியிட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்