செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய இன்சைட் விண்கலம்: நாசா சாதனை

செவ்வாய், 27 நவம்பர் 2018 (08:16 IST)
அமெரிக்காவின் நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய  இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாகவும், இந்த இன்சைட் விண்கலம் தரையிறங்கியதும் முதல் புகைப்படத்தையும் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து 146 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு சமீபத்தில் நாசா இன்சைட் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் நேற்றிரவே செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் இன்று அதிகாலையில் தரையிறங்கியது. தரையிறங்கிய அடுத்த நிமிடம் இன்சைட் புகைப்படம் அனுப்பியதாகவும், இந்த புகைப்படம் நாசாவை வந்தடைய 8 நிமிடங்கள் ஆனதாகவும், இந்த புகைப்படத்தை பார்த்து நாசா விஞ்ஞானிகள் உற்சாகத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய மதிப்பில் சுமார் ரூ.5000 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் செவ்வாயில் பல ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும், குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், ஆக்சிஜன் மற்றும் உயிர்கள் நடமாட்டம் குறித்து கண்காணித்து அவ்வப்போது புகைப்படங்களை அனுப்பி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்