இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கிமீ தொலைவில் வருகின்றன. பொதுவாக செவ்வாய் கிரகம் 38 கோடி கிமீ தூரத்தில் சுழலும். எனவே, செவ்வாய் கிரகத்தை டெலஸ்கோப் மூலம் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் சமீபத்தில் புழுதி புயல் தாக்கினாலும், டெலஸ்கோப்பில் செவ்வாய் கிரகம் மிக பிரகாசமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு 5 கோடியே 57 லட்சம் கிமீ தூரத்தில் பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம் வந்தது குறிப்பிடத்தக்கது.