பூமியின் நகல், குட்டி சூரியன்: கிளீஸ் கிரகத்தில் மர்மங்கள்!!
புதன், 2 ஆகஸ்ட் 2017 (15:51 IST)
பூமியை பல விஷயங்களில் கிளீஸ் கிரகம் ஒத்துப் போனாலும், சில ஆய்வுகளால் அந்த கிரத்தினுள் இருக்கும் மர்மத்தை உடைக்க முடியாமல் உள்ளது.
பூமிக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகமானது பூமியை விட 5 மடங்கு பெரியது. பூமியைப் போலவே இதன் தட்ப வெப்பமும் உள்ளது.
இந்த கிரகம் ஒரு குட்டி சூரியனை சுற்றி வருகிறது. அந்த சூரியனும் அழிந்து வருகிறது என தெரிகிறது. ஆனால், அதே சமயம் இந்த கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக தெரிகிறது.
இது குறித்து, ஹாக்கிங் கூறியதாவது, வேற்றுக் கிரகவாசிகள் குறித்த ஆய்வு நல்ல விஷயம்தான். அவர்களிடமிருந்து ஒரு நாள் நிச்சயம் சிக்னல் வரும். ஆனால் அதை ஏற்காமல் இருப்பதே நமக்கு நல்லது. இல்லாவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள் என்று கூறியுள்ளார்.