குழந்தைகளை கத்தியால் குத்திய மர்ம நபர்; நாடு முழுவதும் போராட்டம் வெடிக்கும் அபாயம்!?

வெள்ளி, 24 நவம்பர் 2023 (09:18 IST)
அயர்லாந்தில் குழந்தைகள் மீது மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஐக்கிய ராஜ்ஜியங்கள் அருகே அமைந்துள்ள தீவு தேசம் அயர்லாந்து. இதன் தலைநகரமான டப்ளினில் சமீபத்தில் மர்ம நபர் ஒருவர் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக அங்கிருந்த சின்னஞ்சிறு குழந்தைகளை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஒரு சிறுமி, இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 5 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மீது நடத்தப்பட்ட கொடூர வன்முறையால் கொதித்துஎழுந்த மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்த நிலையில் போராட்டம் கலவரமாகி அருகில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்களுக்கு பலர் தீ வைத்தனர். இதனால் இந்த கலவரம் நாடு முழுவதும் பரவும் அபாயம் எழுந்துள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயர்லாந்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அயர்லாந்து போலீஸார் குழந்தைகளை தாக்கிய சம்பவம் பயங்கரவாதிகளின் செயலா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்