72 ஆயிரம் ரூபாய்க்கு இன்ஸ்டாகிராமில் குழந்தை விற்ற தாய் கைது

வெள்ளி, 12 அக்டோபர் 2018 (20:31 IST)
தாய் என்றாலே பாசத்திற்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர் என்றுதான் நான் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றோம். ஆனால் அபிராமி போன்ற தாய்களும் இந்த உலகத்தில் இருப்பதால் தாய்மையின் மீது ஒரு அவநம்பிக்கை ஏற்படுகிறது.

இந்த நிலையில் இந்தோனேஷியாவில் ஒரு தாய் தனது 11 மாத குழந்தையை இன்ஸ்டாகிராம் மூலம் விற்க முயன்றதை அந்நாட்டு காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை தத்தெடுக்கும் ஒரு அமைப்பின் அக்கவுண்டில் பல குழந்தைகளின் புகைப்படங்கள் உள்ளது. அதில் ஒருசில புகைப்படங்கள் கருவில் இருக்கும் குழந்தைகளின் ஸ்கேன் படங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நிறுவனத்தை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தத்தெடுக்க உதவும் அமைப்பு என்ற பெயரில் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கர் தொழிலை அந்நிறுவனம் செய்து வருவதை போலீஸார் கண்டறிந்தனர்.

உடனடியாக அந்த நிறுவனத்தை சுற்றி வளைத்த போலீசார் அந்நிறுவனத்தின் ஆவணங்களை சோதனை செய்தபோது, தாய் ஒருவர் 11 மாத குழந்தையை ரூ.72 ஆயிரத்திற்கு விற்க முன்வந்ததை கண்டுபிடித்து தாய் மற்றும் புரோக்கர்களை கைது செய்தனர். பெற்ற தாயே தன்னுடைய குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முன்வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்