உலக அளவில் அதிக ஸ்மார்ட் போன்கள் விற்பனை: ஆப்பிள் முதலிடம்!

Sinoj

புதன், 17 ஜனவரி 2024 (21:05 IST)
2023 ஆம் ஆண்டு உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 20.1 சதவீதம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்து    முதலிடம் பிடித்துள்ளது.

ஆப்பிள், சாம்சங், ஓபோ, ஒன் பிளஸ் உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை  கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் சந்தையில் வாடிக்கையாளர்களை கவர பல புதிய வகைகளையும் புதிய தொழில் நுட்பங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் ஆப்பிள் ஒவ்வொரு பொருளும் வாடிக்கையாளரின் மனதைக் கவர்ந்துள்ளது.

எனவே  
2023 ஆம் ஆண்டு உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் 20.1 சதவீதம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்து    முதலிடம் பிடித்துள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 12 ஆண்டுகளாக முதலிடம் பிடித்திருந்த சேம்சங்கை வீழ்த்தி, 2023 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது ஆப்பிள்.

ஆப்பிள் நிறுவனம் 20.1 சதவீதம் விற்பனை செய்த  நிலையில்  சாம்சங் நிறுவனம் 19.4 சதவீதம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்