வங்கதேச நாட்டின் புதிய அதிபராக முகமது ஷஹாபுதீன் தேர்வாக வாய்ப்பு

திங்கள், 13 பிப்ரவரி 2023 (22:44 IST)
வங்கதேச நாட்டின் புதிய அதிபராக முகமது ஷஹாபுதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வங்கதேச நாட்டின் அதிபராக முகமது அப்துல் ஹமீதுவின் இருக்கிறார். இவரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம், 24 ஆம் தேதி நிறைவடைகிறது.

எனவே, அடுத்த அதிபரைத் தேர்வு செய்யவரும் பிப்ரவரி 19 ஆம் தேதி  தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து, அதிபர் தேர்தலில் போட்டியிட் ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள்  நீதிபதி முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து, அவர் தன் வேட்புமனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

ஆனால், எதிர்க்கட்சி சார்பில்,அதிபர் பதவிக்கு யாரையும் அவர் முன்னிறுத்ததால, வங்கதேசத்தி 22 வது அதிபராக முகமது ஷஹாபுதீன் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்