பிரதமர் மோடிக்கு ’உயரிய விருது ’: பாஜக கொண்டாட்டம்

வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (20:53 IST)
நம் நாட்டில் வரவிருக்கிற தேர்தலையொட்டி பல கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்திவருகின்றனர். பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும்  பலத்த போட்டி உருவாகியுள்ளது. ராகுலும் மோடியும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவுக்கு ப்ரும் பொக்கிஷம் கிடைத்தது போன்று தற்போது ஒரு செய்தி கிடைத்துள்ளது.
 
ஆம்! நம் நாட்டின் பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருதான புனித ஆண்ட்ரு என்ற விருதை அளிக்க வுள்ளதாகவும் அதற்கான ஆணையில்  இன்று அந்நாட்டின் அதிபர் கையெழுத்திட்டுள்ளதாகவும் ரஷ்ய அரசு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
 
மேலும் இதில் அவர்கள் கூறியுள்ளதாவது :
 
இந்திய மற்றும் ரஷ்ய மக்களுக்கு இடையே நல்ல புரிதலுடன் நட்புறவும் நீடிப்பதற்கு மிகச்சிறப்பான முறைய்ல் செயலபட்டதற்காகவும் ரஷ்யாவின் மிக உயரிய விருதான செயின்ட் ஆண்ட்ரு அப்போஸ்தலர் விருதுக்கு பிரதமர் மோடிக்கு அளிக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
நம் நாட்டில் மிக உயரிய விருதான பாரத் ரத்னா - வைப்போல் கடந்த 1689 ஆம் ஆண்டில் ரஷ்ய சேவை செய்பவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் செயிண்ட் ஆண்ட்ரு அப்போஸ்தலர் விருது உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்