தரையிறங்க தெரியாதா? வில்லனாக கிளம்பிய விமானி! காமெடியனாகிய சம்பவம்!

ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (09:28 IST)
வால்மார்ட் கட்டிடத்தை இடிக்கும் வில்லத்தனத்தோடு விமானத்தை இயக்கிய நபர் அதை தரையிறக்க தெரியாமல் தவித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள டுபேலா நகரில் பிரபலமான வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான அங்காடி செயல்பட்டு வருகிறது. அதே டுபேலா நகரில் சிறிய ரக விமானங்களை இயக்கும் விமான நிறுவனமும் செயல்பட்டு வந்துள்ளது.

அதில் கோரி பேட்டர்சன் என்ற நபர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பு பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிங் ஏர் இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானத்தில் எரிபொருள் நிரப்பிய பின் அதை பேட்டர்சன் திருடியுள்ளார்.

ALSO READ: ஆசிய கோப்பை: இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல், வெற்றி தொடருமா?

திருட்டு விமானத்தில் வானத்தில் பறந்த பேட்டர்சன் வால்மார் கட்டிடத்தில் விமானத்தை மோத போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் வால்மார்ட் அங்காடியிலிருந்து அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு, அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் பேட்டர்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் தனது கட்டிட இடிப்பு முயற்சியை கைவிட்டார். ஆனால் விமானத்தை தரையிறக்காமல் தொடர்ந்து வானில் சுற்றிக் கொண்டே இருந்தார். விசாரித்ததில் அவரிடம் விமான ஓட்டி லைசென்ஸ் கிடையாது என்றும், அவருக்கு விமானத்தை தரையிறக்க தெரியாது என்றும் தெரியவந்துள்ளது.

3 மணி நேரமாக வானில் பறந்த பின்னர் வேறொறு விமானியின் வழிகாட்டுதலை பின்பற்றி வயலில் விமானத்தை பேட்டர்சன் இறக்கியுள்ளார். பின்னர் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்