அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்பனை

புதன், 12 ஏப்ரல் 2017 (18:35 IST)
மேற்கு ஆப்பரிக்கா நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்கப்படுவதாக சர்வதேச இடம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.


 

 
ஆப்பரிக்கா நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்கப்படுவதாக சர்வேதச இடம்பெயர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
சிலர் தீவிரவாத கும்பல்களால் பணத்திற்காக கடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களை விடுவிக்க அவர்களது குடும்பத்தினரிடம் பணம் கேட்பதாகவும், பணம் கொடுக்காவிட்டால் அவர்களுக்கு உனவளிக்காமல் பட்ணியால் சாக விடுகின்றனர்.
 
பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக நைஜீரியா, கானா மற்றும் கேம்பியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை கட்டாயப்படுத்தி சூப்பர் மார்கெட் அல்லது வீடுகளில் காவலாளிகளாக பணிபுரிய வைக்கின்றனர்.
 
லிபியா வழியாக இத்தாலி செல்லும் பெண்கள், குழந்தைகள் என பலர் கடத்தல்காரர்களிடம் பாலியல் துன்புறுத்தல் ஆளாவது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் தாண்டி ஆப்பரிக்கா மக்கள் அகதிகளாக ஐரோப்பா நாடுகளுக்கு செல்கின்றனர்.
 
பிரிட்டன் நாடு இரு காலத்தில் அடிமைகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அடிமை கலாச்சாரம் குறிப்பிட்ட காலம் வரை அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்