ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மைக்ரோசாஃப்ட்

வெள்ளி, 9 ஜூலை 2021 (19:07 IST)
உலகில் அதிகம் பேரால் கணினி மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தப்படுவது
மைக்ரோசாஃப்ட் பொருட்கள்.


உலகில் மிகப்பெரும் செல்வந்தரான பில்கேட்ஸ் மற்றும்  பால் ஆலன்  ஆகிய இருவரும் இணைந்து இதை நிறுவினர். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரம்பிக்க வைக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில், கடந்தாண்டு உலகம் முழுவதும் பரவிய கொரொனா தொற்று தற்போது கொரொனா இரண்டாம் வகையாக உருமாறி அடுத்து 3 ஆம் வகையாக உருமாறுமென எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரொனா பெருந்தொற்றுப் போனஸாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ரூ.1 லட்சம் போனஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஃபேஸ்புக், அமேசான் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரொனா போனஸ் அறிவித்த நிலையில் தற்போது மைக்ரோசாஃப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்