கொரோனாவால் அதிகமாக பாதிக்கபப்ட்ட துறைகளில் சினிமாத்துறையும் ஒன்று. அரசின் அங்கிகரிக்கப்பட்ட தொழில் துறை இல்லை என்பதால் அரசிடம் பெரிதாக நிவாரண உதவிகளும் இந்த துறைக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர் கே செல்வமணி தமிழ் சினிமாவை நம்பி 60 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுக்கு சுமார் 200 படங்கள் வரை ரிலீஸாகி வந்தன. ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனாவால் கடுமையாக திரைத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.