இந்தியா உள்பட உலகின் சில நாடுகளில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய போவதாக அறிவித்தது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடன் டிக்டாக் செயலிக்கு தடை என்று அறிவித்தது. ஆனால் சில மணி நேரங்களில் தடையை நீக்கி அமெரிக்க நிறுவனத்திற்கு டிக் டாக் செயலியை விற்பனை செய்ய டிரம்ப் கால அவகாசம் கொடுத்தார்.
இந்த நிலையில் டிக் டாக் செயலியை வாங்க அமெரிக்காவின் பல முன்னணி நிறுவனங்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் குறிப்பாக எலான் மஸ்க் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி, டிக் டாக் செயலியை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.