ரஷ்யாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்று மைக்ரோசாப்ட் என்பதும் இந்நிறுவனம் உலகின் பல நாடுகளில் தனது கிளைகளை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை ரஷ்யாவில் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது ரஷ்யாவில் தனது நிறுவன செயல்பாடுகளை முழுமையாக நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உக்ரைன் நாட்டின் மீது நடத்திய தாக்குதலால் ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடை விதித்துள்ள காரணத்தினால் மைக்ரோசாப்ட் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது