1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்?

புதன், 19 அக்டோபர் 2022 (20:03 IST)
உலகின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் மிகப்பெரும் செல்வந்தரான பில்கேட்ஸ் மற்றும்  பால் ஆலன்  ஆகிய இருவரும் இணைந்து இதை நிறுவினர். தற்போது இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிரம்பிக்க வைக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும்  இந்த நிறுவனத்தில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தற்போது டெக் நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்த நிலை உருவாகியுள்ளதால் டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புலக்,. கூகுள்,நெட்பிளிக்ஸ் என முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்த நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்