அவதூறாக பேசினா அப்படிதான் அபராதம் போடுவோம்! – கூகிளுக்கு மெக்சிகோ நீதிமன்றம் தீர்ப்பு!

ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:50 IST)
தனிநபர் ஒருவர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூகிள் மீது மெக்சிகோ நீதிமன்றம் கடும் அபராதம் விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் கூகிள் தேடுபொறி பல நாடுகளில் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. மெக்சிகோவில் வழக்கறிஞரும், எழுத்தாளருமாக இருந்து வரும் ரிச்டர் மொராலஸ் என்பவர் முறைகேடாக போதைபொருள் கடத்துவதாக கூகிள் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்துள்ளது. இது தவறான தகவல் என்றும், நீக்க வேண்டும் என்றும் மொராலஸ் கூகிளுக்கு தெரிவித்தும் அவர்கள் நீக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த 2015ல் வழக்கு தொடர்ந்த ரிச்டர் மொராலஸ் தன்மீது தவறான அவதூறு குற்றச்சாட்டுகளை கூகிள் பரப்புவதாக தெரிவித்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மெக்சிகோ நீதிமன்றம் கூகிளுக்கு ரூ.1,910 கோடி அபராதமாக விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதை ஏற்காத கூகிள் நிறுவனம் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்