என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

Prasanth K

வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (10:16 IST)

மக்கள் அதிகமாக பயன்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் திடீரென கால் செய்வது மற்றும் தொடர்பு எண்கள் பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியா முழுவதும் பெருவாரியான மக்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் நாளுக்கு நாள் தேவைக்கேற்ப மாற்றங்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு ஃபோன்களில் Dialer, Contact List மற்றும் அழைக்கும்போது அட்டெண்ட் செய்யும் Interface ஆகியவை ஒரே மாதிரியாக இருந்து வந்த நிலையில் அதற்கு மக்கள் பழகியிருந்தனர்.

 

இந்நிலையில் தற்போது Google Dialer தனது இடைமுகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தால் மக்கள் செல்போனில் என்ன ஆனது என புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் பயனாளர் அனுபவத்தை எளிமையாக்கும் வகையில் இந்த New Interface அறிமுகமாகியுள்ளது. இதுநாள் வரை ஃபோன் வந்தால் மேலே இழுத்து ஸ்வைப் செய்தால் அண்டெண்ட் ஆகும். கீழே இழுத்துவிட்டால் கட் ஆகும். இதை தற்போது வலது, இடது என மாற்றியமைத்துள்ளார்கள்.

 

அதுபோல Contact List, Dialer உள்ளிட்டவற்றிலும் கூகிள் சில அப்டேட்களை செய்துள்ளது. அதனால் மக்கள் ஃபோனில் ஏதாவது கோளாறோ அல்லது எதையாவது மாற்றிவிட்டோமோ என்ற குழப்பம் இன்றி இந்த புதிய இடைமுகத்திற்கு பழகிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்