16 வினாடி மாஸ்க்கை கழட்டிய நபருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம்!

வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:16 IST)
இங்கிலாந்தில் ஷாப்பிங் மாலில் மாஸ்க்கை கழட்டிய நபருக்கு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அலைகளில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒழுங்காக எடுக்கவில்லை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது பொது இடத்தில் தனது மாஸ்க்கை 16 வினாடிகள் அணியாமல் இருந்த நபருக்கு இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம்.

ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்ற கிறிஸ்டோபர் ஓ டூல் என்ற இளைஞர் நீண்ட நேரமாக மாஸ்க் அணிந்திருந்த அசௌகர்யத்தால் மாஸ்க்கை கழட்டி மாட்டியுள்ளார். இடைப்பட்ட 16 வினாடிகள் அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்