போராட்டக் களத்துக்கு சிங்கத்தை அழைத்து வந்த நபர் –அதிகாரிகள் நடுக்கம் !

செவ்வாய், 19 நவம்பர் 2019 (14:59 IST)
ஈராக்கில் நடக்கும் போராட்டங்களில் பங்குகொள்ள ஒரு நபர் சிங்கத்தை அழைத்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஈராக்கில் அரசு எந்திரத்தில் நடக்கும் ஊழலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக பாதுகாப்புப் படையினர் போலீஸ் நாய்களை அங்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டக்காரர்களில் ஒருவர் அதிகாரிகளுக்கு எதிராக சிங்கம் ஒன்றை களத்துக்கு அழைத்து வந்துள்ளார். ஈராக் கொடியை உடலில் போர்த்தி ஒய்யாரமாக நடந்து வரும் அந்த சிங்கத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

போராட்டக்காரர்கள் ராக் பாராளுமன்றம் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் செல்லும் முக்கியப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்