இஸ்ரேலியர்கள் நாட்டிற்குள் நுழைய தடையா? மாலத்தீவு அதிபர் ஆலோசனை என தகவல்..!

Siva

திங்கள், 3 ஜூன் 2024 (13:17 IST)
மாலத்தீவு நாட்டிற்கு இஸ்ரேலியர்கள் நுழைய தடைவிதிக்க மாலத்தீவு அதிபர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உலகம் முழுவதும் அதிக அளவில் மாலத்தீவு நாட்டிற்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலியர்கள் நுழைய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட இருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன. 
 
காசாவில் நடக்கும் போர் காரணமாக இஸ்ரேலின் மீது இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் மாலத்தீவு மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலத்தீவு அதிபர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் மாலத்தீவுக்கு வரும் இஸ்ரேலியர்களை தடுக்க விரைவில் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாலஸ்தீனத்திற்கு மாலத்தீவு மூலம் உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் மாலத்தீவு மக்கள் என்ற பெயரில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்,  இஸ்ரேலிய மக்கள் மாலத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்