உலகம் முழுவதும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வை சமூக நல ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில் 12 வயதிலேயே குழந்தைகள் பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டம் ஒன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது. இதனால் குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இந்த சட்டம் மலேசிய பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.