உலகம் எங்கும் எதிரொலிக்கும் டெல்லி போராட்டம்! – லண்டனில் ஆதரவு போராட்டம்!

திங்கள், 7 டிசம்பர் 2020 (11:36 IST)
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக உலகம் முழுவதும் குரல்கள் எழ தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் ஆயிரக்கணக்கில் திரண்டு பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய குழுக்களுடனான மத்திய அரசின் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்து வரும் நிலையில் நாளை நாடு தழுவிய பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டனில் போராட்டம் நடந்துள்ளது. லண்டன் வாழ் இந்தியர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், இந்தியா தனது விவசாயிகளை விற்க கூடாது என்றும் பலகை பிடித்து பலர் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்