சின்சியாங்கில் சுதந்திரமாக வேலை செய்யும் உள்ளூர் மக்கள்!

வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:23 IST)
கரோனா வைரஸ் பரவலையடுத்து உலகம் முழுவதும் உயிரழப்புகளை தாண்டிய பொருளாதார இழப்புகளும், வேலை இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் உலகநாடுகள் தங்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளன. அமெரிக்க  ஃபெடரல் ரிசர்வ் வங்கி புதன்கிழமை வட்டி விகிதத்தை பூஜியத்தின் மிகக்குறைந்த மட்டத்தில் வைத்திருந்தது மற்றும் குறைந்தபட்சம் 2023 வரை இந்த இலக்கு வரம்பை மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து இணையவழி நடைபெற்ற மத்திய வங்கியின் இரண்டு நாள் கொள்கைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை பிற்பகல் செய்தியாளர் சந்திப்பில் கூறினார் .வேலையின்மை விகிதம் இந்த ஆண்டின் இறுதியில் 7.6 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 1.2 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் படிப்படியாக அதிகரிக்கும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனா தனது வடமேற்கு சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை வெளியிட்டது.

சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை, மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் மிக அடிப்படையான திட்டமாக புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதை  முதன்மையாக கொண்டுள்ளனர். மேலும் பாலர் கல்வி, ஒன்பது ஆண்டு கட்டாயக் கல்வி, மூத்த உயர்நிலைப் பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இப்போது வரலாறு காணாத அளவில் அந்த பிராந்தியத்தில் மாணவர்கள் சேர்க்கை உள்ளதால் அரசாங்கத்தின் கல்வித் திட்டங்கள் சின்ஜியாங்கின் பணியாளர்களின் தரத்தை கணிசமாக மேம்படுத்தியுள்ளன என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

2019 ஆம் ஆண்டில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 800 முழுநேர மாணவர்கள் (2014 ஐ விட 146,200 அதிகரிப்பு), மேல்நிலைப் பள்ளிகளில் 1.84 மில்லியன் மாணவர்கள் (2014 ஐ விட 147,600 அதிகரிப்பு) இருந்ததாக வெள்ளை அறிக்கை கூறுகிறது.

அந்த ஆவணத்தின்படி, அரசாங்கத்தால் நடத்தப்படும் தொழிற்பயிற்சி திட்டம் சராசரியாக 1.29 மில்லியன் நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பயிற்சி அமர்வுகளை வழங்கியுள்ளது,

இதில்  2014 முதல் 2019 வரை 451,400 பேர் தெற்கு சின்ஜியாங்கில், இருந்து வந்தனர் 2019ல்  ஹோடன் ப்ரிஃபெக்சர் மட்டும் 103,300 விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களு            க்கு தொழில் பயிற்சி அளித்தது, அவர்களில் 98,300 பேர் பின்னர் வேலை தேடினர், வேலைவாய்ப்பு விகிதம் 95 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

மேலும் இந்த அறிக்கையில் சின்சியாங்கில் "கட்டாய உழைப்பு" மற்றும் "மனித உரிமை மீறல்" பற்றிய தவறான கூற்றுக்களை சில சர்வதேச சக்திகள் ஆதரிப்பதாகவும் அத்துடன் உள்ளூர் அரசாங்கங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக சில மோசடி பிரச்சாரம் செய்வதாகவும் இந்த  ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சின்சியாங்கில் உள்ள உள்ளூர் மக்கள் சுதந்திரமாக வேலை செய்கிறார்கள் வறுமையிலிருந்து விடுபடும் இலக்கை நோக்கி செயல்படுகிறார்கள் மக்கள் நலனுக்கு  முக்கியத்துவம் அளிக்கும் உறுதியான நடவடிக்கைகளை சின்சியாங் தொடரும் மக்களின் நல்வாழ்வுக்கு மிக முக்கியமான வேலைவாய்ப்பை அளிப்பது என்ற கொள்கையை கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்