லெஸ்பியன் வகை உறவில் மகள்; ரூ. 1,164 கோடி சொத்து: திருமணம் நடத்த போராடும் தந்தை!!

வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (12:26 IST)
சீனாவை சேர்ந்த பில்லியனர் செசில் சாவோ, ஹாங்காங்கில் ரியல் எஸ்டேட் மற்றும் பிராப்பர்டி டெவலப்மெண்ட் மூலமாக பெரும் பணக்காரராக திகழ்கிறார். 


 

 
இவரது ஒரே மகள் கிகி ஓரினச் சேர்க்கையாளர். இவரை இதில் இருந்து மாற்றி, எவரால் திருமணம் செய்துக் கொள்ள முடியுமோ அவருக்கு ரூ.1,164 கோடி சொத்தை தருவதாக அறிவித்துள்ளார்.
 
2012 முதல் முறையாக தன் மகளை லெஸ்பியன் வகையில் இருந்து மாற்றும் ஆணுக்கு 60 மில்லியன் டாலர்கள் சன்மானம் என அறிவித்தார். ஆனால் அது தற்போது 180 மில்லியன் டாலர்களில் வந்து நிற்கிறது. இது ஏறத்தாழ இந்திய மதிப்பில் ரூ.1,164 கோடியே 15 லட்ச ரூபாய் ஆகும்.
 
ஆனால் இன்னும் தனது மகளை யாரும் திருமணம் செய்ய முன்வராததால் அவரது மகள் லெஸ்பியன் வகை உறவில் நீடித்து வருவதால் செசில் சாவோ வருத்தத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்