உருளைக்கிழங்கின் உதவியோடு எல்இடி விளக்குகளை 40 நாட்கள் எரியவைக்க முடியுமா???

திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:28 IST)
உருளைக்கிழங்கின் உதவியோடு எல்இடி விளக்குகளை 40 நாட்கள் எரியவைக்க முடியும் என அறிவியல் மற்றும் வேளாண்துறை பேராசிரியர்களின் குழு கண்டுபிடித்துள்ளது.


 
 
உருளைக்கிழங்கில் ஆற்றல் ஒரு பெரிய ஆதாரமாக இருக்கிறது. எட்டு நிமிடங்கள் வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கு வழக்கமான பேட்டரிகளை விட 10 மடங்கு அதிக சக்தியை உடையது. 
 
பேராசியர்களின் ஆய்வில், உருளைக்கிழங்கு துண்டுகள், தாமிர காத்தோடுக்கும்(copper cathode) துத்தநாக ஆனோடுக்கும்(zinc anode) இடையே வைக்கப்பட்டு, அவை ஒரு கம்பியின் மூலம் இணைக்கபடும் போது எல்இடி விளக்குகளை 40 நாட்கள் எரியவைக்க இயலும் என்பதை கண்டறிந்தனர்.
 
உருளைக்கிழங்குகள், எந்தவொரு காலநிலையிலும், பருவத்திலும் வளரக்கூடியது. இதற்கு என்றுமே பற்றாக்குறை இல்லை. இதன்னால் இதை மின்சக்திக்கு பதிலாக பயன்படுத்துவதில் பின்னடைவு இருக்காது.
 
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உருளைக்கிழங்கு உலோகங்களுகு இடையே ஒரு பாலமாக செயல்படும் ஆற்றல் உடையது. இதன்மூலம் மின்சாரம் உருவாகி, கம்பி முழுவதும் பயணம் செய்து எலக்ட்ரான்களை செயல்படுத்தி ஒளி தருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்