10 நிமிடத்தில் ரூ.117 கோடிக்கு ஏலம் போன கோபமான குட்டிபெண்!

புதன், 9 அக்டோபர் 2019 (10:11 IST)
ஜப்பானை சேர்ந்த ஓவியர் ஒருவர் வரைந்த ஓவியம் 10 நிமிடத்தில் ரூ.117 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. 
 
கிழக்கு ஆசிய நாடான ஐப்பானை சேர்ந்தவர் ஓவியர் யோஷிடோமோநாரா. இவர் ஐரோப்பிய நாடான ஜெர்மெனியில் 12 ஆண்டுகள் வசித்த பின் 2000-த்தில் ஜப்பான் திருப்பினார். 
 
அப்போது சிவப்பு நிர ஆடை அணிந்த கோபமான சிறுமியின் கார்ட்டூன் ஒன்றை வரைந்தார். அந்த கார்ட்டூனில் வரையப்பட்ட சிறுமியின் ஒரு கை முதுகுக்கு பின்னால் மறைத்து வைத்திருப்பது போல இருக்கும். 
 
யோஷிடோமோநாரா, அந்த மறைக்கப்பட்ட கையில் கத்தி இருப்பதாகவும், இந்த கார்ட்டூனுக்கு ‘பின்னால் மறைக்கப்பட்ட கத்தி’ எனவும் பெயரிட்டார். இந்த கார்ட்டூன் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகரில் ஏலம் விடப்பட்டது. 
 
யாரும் எதிர்பாராத வகையில் ஏலம் துவங்கிய 10 நிமிடத்தில் இந்த கார்ட்டூன் ரூ.117 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்