ஆட்சி மாறினாலும் அமெரிக்காதான் எதிரி… அனு ஆயுதங்கள் தயார் நிலையில் – கிம் ஜான் உங் அறிவிப்பு!

சனி, 9 ஜனவரி 2021 (17:23 IST)
வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் அமெரிக்காவின் வடகொரிய மீதான பார்வை மாறப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்னர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பல நாட்களாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. தென் கொரிய அதிகாரிகள் சிலர் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், விரைவில் அதிபர் பொறுப்பை அவரது சகோதரி ஏற்க உள்ளதாகவும் தெரிவித்து வந்தனர். ஆனால் இன்னமும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது அவர் அமெரிக்கா குறித்து பேசியுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் ‘அமெரிக்காவில் ஆட்சி மாறினாலும், யார் பதவி ஏற்றாலும் வட கொரியா மீதான அவர்களின் பார்வை மாறப்போவதில்லை. எனவே அனு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை தயாராக வையுங்கள்’ என அவர் கூறியதாக மத்திய செய்தி ஏஜென்சி செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்