கடலூர் மாவட்டம் பன்ரூட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரின் மனைவி கலை சுந்தரி. இவர்களுக்கு சிவானி என்ற மகள் உள்ளார். குடும்ப வறுமை சூழல் காரணமாக ராஜசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சூடானில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஊருக்கு திரும்பி வர இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் வேலைப்பார்த்து வந்த தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.