அமெரிக்காவை அதிர வைக்கும் வடகொரிய அதிபருக்கு கேரள முதல்வர் பாராட்டு

வெள்ளி, 5 ஜனவரி 2018 (06:02 IST)
அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் நடுங்க வைத்து கொண்டிருப்பவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். தன்னுடைய மேஜையில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் அமெரிக்கா அவ்வளவுதான் என்று தைரியமாக அவர் கூறியிருக்கும் நிலையில் வடகொரிய அதிபரின் தைரியத்தை கேரள முதல்வர் பிரனாயி விஜயன் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவும் ஐநாவும் இணைந்து பொருளாதாரத்தடை உள்ளிட்ட கடுமையான அழுத்தங்கள் கொடுத்து கொண்டிருந்தாலும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தியிருப்பதாக பினராயி விஜயன் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்பதில், சீனாவை விட வடகொரியா சிறப்பாக செயல்படுவதாகவும் அவருடைய முயற்சி வெற்றிகரமாக தொடர வாழ்த்துக்கள் என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

மத்தியில் ஆளும் அரசு கூட வடகொரியாவுக்கு இதுவரை வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத நிலையில் ஒரு மாநிலத்தின் முதல்வர் வடகொரிய அதிபருக்கு வாழ்த்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்