சீனாவில் உருவெடுத்த கொரோனா இப்போது உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,000-த்தை நெருங்குகிறது. அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,18,000-த்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சீனா ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த கைக்கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இந்த மருந்தால் 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.