கொரோனா வைரஸ் எதிரொலி: திடீரென 144 தடை உத்தரவு போட்ட மாநில அரசு

வியாழன், 19 மார்ச் 2020 (08:40 IST)
திடீரென 144 தடை உத்தரவு போட்ட மாநில அரசு
கொரோனா வைரஸ் எதிரொலியால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை கடந்த சில நாட்களாக எடுத்து வந்து கொண்டிருக்கும் செய்திகள் குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இந்த நடவடிக்கையின் முக்கிய பகுதியாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அப்படியே அத்தியாவசிய பணிகள் காரணமாக வெளியே வந்தாலும் அதிக மக்கள் ஒரே இடத்தில் கூட வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தி வருகின்றன
 
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் நான்கு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் அம்மாநில மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும், போராட்டம் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை தவிர்க்கவும் இந்த 144 தடை உத்தரவு போடப்பட்டது என ராஜஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் ராஜஸ்தானை அடுத்து இன்னும் ஒரு சில மாநிலங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்