குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பான் அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (12:32 IST)
ஜப்பானில் நாளுக்கு நாள் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதை அடுத்து அந்நாட்டு அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
ஜப்பான் நாட்டில் கடந்த சில வருடங்களாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்ததை அடுத்து குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என்பதும் இளைய தலைமுறையினர் வறுமை  காரணமாகவே குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
வேலைவாய்ப்பு, குறைவான சம்பளம் ஆகியவை காரணமாகத்தான் குழந்தை பெற்றுக்கொள்ள ஜப்பான் இளைஞர்கள் தயங்கி வந்ததாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்களுக்கு சம்பளத்தை உயர்த்த ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. 
 
அரசு பணிபுரியும் இளைஞர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு கிட்டத்தட்ட 50% சம்பளத்தை உயர்த்த இருப்பதாகவும் இதனை அடுத்து அவர்கள் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு குழந்தை பெற்றுக்கொள்ள முன் வருவார்கள் என்றும் ஜப்பான் அரசு நம்புகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்