கற்பழிக்கப்பட்ட பெண் சத்தம் போடாததால் கற்பழித்தவரை விடுதலை செய்த நீதிமன்றம்!

திங்கள், 27 மார்ச் 2017 (10:06 IST)
இத்தாலி நாட்டில் பெண் ஒருவர் தான் வேலை செய்யும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டபோது சத்தம் போட்டு கத்தாததால் குற்றம் சாட்டப்பட்ட நபரை விடுதலை செய்துள்ளது.


 
 
அந்த பெண் தனது புகாரில், தனது உயர் அதிகாரி தன்னை அடிக்கடி தனது பாலியல் தேவைக்கு பயன்படுத்தி வந்தார். நான் உடலுறுவுக்கு மறுத்தால் எனக்கு பணி வாய்ப்பு வழங்காமல் புறக்கணித்து வந்தார் என கூறியுள்ளார்.
 
ஆனால் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் அந்த பெண்ணின் புகாரை மறுத்துள்ளார். இருவரும் மனமொத்து தான் உடலுறவில் ஈடுபட்டதாக கூறினார். இதனையடுத்து அந்த நபர் கற்பழிக்கும் போது பாதிக்கப்பட்ட பெண் ஏன் கத்தவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
ஆனால் இதற்கு பதில் அளித்த அந்த பெண், ஒருவர் உடலுறவுக்கு அழைக்கும் போது முடியாது என கூறும் வார்த்தையே போதுமானது. மேலும் என்னை கற்பழித்தவர் என்னை விட பலசாலி என்பதால் அவரை என்னால் தடுக்க முடியவில்லை என்றார். ஆனால் இதனை ஏற்காத நீதிபதி, கற்பழிக்க வரும் ஒரு நபரிடம் வேண்டாம் என கூறுவது போதுமான ஆதாரமாக இல்லை எனக் கூறி குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரை விடுதலை செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்