காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு..! – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனமாற்றம்?

திங்கள், 16 அக்டோபர் 2023 (11:45 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்கா காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயலக்கூடாது என கூறியுள்ளது.



இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையே போர் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்த போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. முன்னதாக ஹமாஸ் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பலரை கொன்று பணையக்கைதிகளாக பலரை கடத்தியும் சென்றனர்.

இந்நிலையில் ஹமாஸ் குழுவின் புகலிடமான காசா முனை மீது முப்படை தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல் அங்குள்ள பணையக்கைதிகளை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “ஹமாஸ் கும்பல் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கும்பலை ஒழிக்க வேண்டுமே தவிர காசா முனையை கைப்பற்றக்கூடாது. அப்படி செய்தால் அது மிகப்பெரும் தவறாகிவிடும்” என கூறியுள்ளார்.
காசா முனையில் எண்ணெய் வளம் மிகுந்திருப்பதாக சமீபமாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த திடீர் கரிசனம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்