மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையே நீடித்து வரும் போர் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸிற்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளில்லா விமான தாக்குதலில், 4 இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததோடு, 65 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் விமானம் ஏவத் திட்டமிட்டது தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இது தொடர்பாக வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் துயரத்தை உணர்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளது.
இதே நேரத்தில், மத்திய காசா பகுதியில் உள்ள பள்ளி மீது மேற்கொண்ட தாக்குதலில், குழந்தைகள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். 80க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.