ஹெஸ்புல்லா ரகசிய சந்திப்பு! சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! - முக்கிய புள்ளி கொலை!

Prasanth Karthick

வியாழன், 3 அக்டோபர் 2024 (13:45 IST)

மத்திய கிழக்கில் இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே நடந்து வரும் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஹெஸ்புல்லா தலைவரின் மருமகனை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஹமாஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹெஸ்புல்லா அமைப்பு, லெபானானில் இருந்து இஸ்ரேலை தாக்கத் தொடங்கியுள்ளது.

 

இதனால் லெபனான் எல்லைகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஹெஸ்புல்லாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை செய்து வருகிறது. இப்படியாக போர் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க இஸ்ரேலின் உளவு அமைப்பும், ராணுவமும் ஹெஸ்புல்லா முக்கிய தலைவர்களை குறிவைத்து கொன்று வருகிறது.

 

முன்னதாக ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த விடுதியில் வைத்தே கொல்லப்பட்டார். தொடர்ந்து சமீபத்தில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வைத்து கொன்றது இஸ்ரேல். அதை தொடர்ந்து ஹெஸ்புல்லா தளபதிகள் புவாத் ஷூகர், நபில் குவாவக் ஆகியோரும் கொல்லப்பட்டனர். 
 

ALSO READ: சல்லி சல்லியாய் நொறுங்கும் நாம் தமிழர் கட்சி: மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்..!
 

அதை தொடர்ந்து தற்போது ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிரை சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரத்தில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளது இஸ்ரேல். சிரியாவில் உள்ள அந்த குறிப்பிட்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் புரட்சிக் கும்பல் அடிக்கடி சந்திப்புகளை நடத்துவது வழக்கம்.

 

ஹசன் நஸ்ரல்லாவின் மறைவுக்கு பிறகு ஹெஸ்புல்லா அமைப்பின் செயல்பாடுகளில் முக்கிய புள்ளியாக இருந்தவர் அவரது மருமகன் அல்-காசிர். அதனால் திட்டமிட்டு அல்-காசிர் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் கொன்றுள்ளதாக ஹெஸ்புல்லா வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. இதனால் போரில் ஹெஸ்புல்லாவுக்கு பின்னடைவு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்