பார்க்கின்சன் நோயா? புற்றுநோயா? புதின் உடல்நலம் குறித்து வெளியாகும் குழப்பமான செய்தி!

ஞாயிறு, 22 நவம்பர் 2020 (11:24 IST)
ரஷ்ய அதிபர் புதினின்  உடல்நிலை குறித்து சமீபகாலமாக சர்ச்சையான செய்திகள் வெளியாகிக் கொண்டு உள்ளன.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரலை நெறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புடின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பார்க்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவர் இப்போது அதிக அளவிலான வலியை எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லபப்டுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வில் அவர் நடக்க மிகவும் சிரமப்படுவது போல தோன்றியது. இது மக்களிடையே மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது புதினுக்கு இருப்பது பார்க்கின்ஸன் நோய் அல்ல என்றும் புற்றுநோய் என்றும் புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  இதனால் அதிபர் புதின் மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கி விட்டு விரைவில் ஓய்வு பெற திட்டமிட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்