பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இஸ்லாமிய நாடான அங்கு இஸ்லாமிய மதக்கடவுள், மதக்கடவுள்களின் இறைத்தூதர் பற்றி அவதூறு கருத்துகள் கூறினாலோ, அவமதித்தாலோ, மத நிந்தனை செய்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் இறைத்தூதர் பற்றிய அவதூறு கருக்கள் இடம்பெற்ற புகைப்படங்கள்,வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த வழக்கில் 22 வயது மாணவன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 22 வயது மாணவனுக்கு மரணதண்டனையும், 17 வயது மாணவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.