உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் படிக்கலாம்: போலந்து அறிவிப்பு
புதன், 2 மார்ச் 2022 (19:30 IST)
உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் எங்கள் நாட்டில் படிக்கலாம்: போலந்து அறிவிப்பு
உக்ரைனில் படித்து வந்த மருத்துவ மாணவர்கள் எங்கள் நாட்டில் தங்களுடைய படிப்பை தொடரலாம் என போலந்து அறிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த நிலையில் தற்போது போர் காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் உள்ளனர் இதனால் அவர்களது படிப்பு பாதியில் விடுபட்டும் நிலையில் உள்ளது
இந்த நிலையில் இந்திய மாணவர்கள் விரும்பினால் எங்கள் நாட்டில் தங்களுடைய கல்வியை அவர்கள் தொடரலாம் என்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அவரவர் வகுப்புகளை தொடர உதவுவதாகவும் போலந்து அரசு அறிவித்துள்ளது
இதனை அடுத்து மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் போலந்து சென்று மருத்துவம் படிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது