ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பயணித்த இந்தியர்! – சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பி வைப்பு!

வெள்ளி, 12 நவம்பர் 2021 (16:04 IST)
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக வல்லரசு நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பல நாட்டு விண்வெளி வீரர்களும் தங்கி விண்வெளி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விண்வெளி மையத்திற்கு முதலில் நாசா விண்கலம் மூலமாக ஆட்கள், தேவையான பொருட்களை அனுப்பி வைத்து வந்தது.

இந்நிலையில் சமீப காலமாக நாசாவுடன் இணைந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதை வெற்றிகரமாக செய்து வருகிறது. சமீபத்தில் 6 பேர் கொண்ட விண்வெளி ஆய்வு குழுவை ஸ்பேஸ் எக்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் இந்திய வம்சாவளி ஆய்வாளரான ராஜா சாரி என்பவரும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்