மனைவி, மகனை சுட்டுக்கொன்று வாலிபர் தற்கொலை.. அமெரிக்க இந்தியரின் விபரீத முடிவு..!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:38 IST)
அமெரிக்காவில் வாழும் இந்திய வாலிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் என்ற பகுதியில்  யோகேஷ் நாகராஜப்பா என்பவர் தனது மனைவி பிரதீபா மற்றும் மகன் யாஸ் ஹான்னல் ஆகியோர்களுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
 
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி திடீரென துப்பாக்கியால் தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்களது உடல்களை நான்கு நாட்களுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர். மூவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்