அமெரிக்காவில் வசூல் மழைகொட்டும் ஜெயிலர் தெலுங்கு வெர்ஷன்!

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:59 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரிசையாக தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியால் பாதிக்கப்பட்டு இருந்த ரஜினிக்கு மீண்டும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது ஜெயிலர்.

பீஸ்ட் என்ற தோல்வி படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கிய படம் என்பதால் முதலில் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் ரிலீஸ் சமயத்தில் மிகப்பெரிய ரஜினி அலை வீசியது. இந்நிலையில் இப்போது 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயிலர் திரைப்படம் இந்தியாவைப் போலவே வெளிநாடுகளிலும் வசூலில் கலக்கி வருகிறது. அதிலும் அமெரிக்காவில் ஜெயிலர் படத்தின் தெலுங்கு வெர்ஷன் திரைப்படம் மட்டும் ஒரு மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அங்கு வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்