கீவ்விலிருந்து எப்படியாவது உடனே வெளியேறுங்கள் – இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

செவ்வாய், 1 மார்ச் 2022 (12:19 IST)
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் நிலையில் இந்தியர்களை அவசரமாக வெளியேறும்படி இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உலக போர் எழ வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.

போரை நிறுத்தும் நோக்கில் நேற்று பெலாரஸில் நடந்த உக்ரைன் – ரஷ்யா பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா தீவிரமான தாக்குதலை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய மக்கள் அங்கிருந்து ரயிலோ, பேருந்தோ அல்லது இதர வாகனங்களையோ பிடித்து இன்றைக்குள் கீவ்விலிருந்து வெளியேறி விடுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்