ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக ஐ.க்யூ - இந்திய சிறுவன் சாதனை

சனி, 1 ஜூலை 2017 (10:51 IST)
உலக அளவில் நடத்தப்பட்ட ஐ.க்யூ தேர்வில், இங்கிலாந்தில் வாழும் இந்தியாவை சேர்ந்த மாணவன் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.


 

 
இங்கிலாந்தில் மிகவும் பிரபலாமனது  மென்சா ஐ.க்யூ. தேர்வு.  இந்த தேர்வில் மனிதர்களின் நுண்ணறிவு திறமை சோதிக்கப்படும். இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல சிறுவர்கள் கலந்து கொண்டனர். அதில் சர்மா என்ற 11 வயது சிறுவனும் ஒருவர். இதில் அவர் 162 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளார்.
 
ஏனெனில், இது அறிவியல் துறைகளில் மிகப்பெரும் விஞ்ஞானிகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் ஐ.க்யூ-வை விட அதிகம்.  அவர்களின் ஐ.க்யூ மதிப்பு 160 என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பில்கேட்ஸின் ஐ.க்யூ மதிப்பும் 140-160 தான். ஆனால், சிறுவன் சர்மாவின் ஐ.க்யூ 162 ஆக இருக்கிறது.
 
இந்த தேர்வுக்காக நான் என்னை பெரிதாக தயார் படுத்திக்கொள்ளவில்லை. தேர்வு ரிசல்டை எனது பெற்றோரிடம் கூறியது போது அவர்கள் அதிர்ச்சியும், சந்தோஷமும் அடைந்தனர் என சிறுவன் சர்மா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்