வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினர். இருவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தபோது, மனிதக் கடத்தல் அதிகரித்து வருவதாகவும், இந்தியாவில் இருந்து பல நபர்கள் ஏமாற்றப்பட்டு சட்டவிரோதமாக அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதில் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பெரும் கனவுடன் ஏமாற்றத்திற்குள் சிக்கி விடுவதாகவும், அவர்களை ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி கூறினார்.
மேலும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப பெற இந்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வாரம் நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட நிலையில், அடுத்த விமானம் வரும் 15ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.