அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர், அவர்களுடைய சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே ஒரு விமானத்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்கள் என்பதை பார்த்தோம்.
முதல் கட்டமாக, 104 பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை இந்தியாவுக்கு நாடு கடத்தியது. அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட அவர்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த 5ஆம் தேதி வந்தனர்.
இந்த நிலையில், நாளை, அதாவது பிப்ரவரி 15ஆம் தேதி, இரண்டாவது விமானம் 487 இந்தியர்களை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கு இந்திய பிரதமர் மோடி சென்றிருக்கும் நிலையில், இரண்டாவது விமானம் அங்கிருந்து கிளம்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.